FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் நடிகை ராதா வழிபாடு! காரணம் என்ன?

காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கருத்தீஸ்வரர் திருக்கோயிலில் நடிகை ராதா சுவாமி தரிசனம் செய்தது பற்றி..

12 அக்டோபர் 2026, 12:36 pm IST
நடிகை ராதா - படம்: எக்ஸ்
பகிர்:

பிரபல திரைப்பட நடிகை ராதா, வழக்குகளை தீர்த்து வைக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளில் பங்கேற்க வந்த பக்தர்கள், பூஜைகளை மறந்துவிட்டு, நடிகையுடன் போட்டோ எடுக்க ஆர்வம் காட்டியதால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

கோயில் நகரமென கூறப்படும் காஞ்சிபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் காந்தி சாலையில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

இத்திருக்கோயிலில் பக்தர்களின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், வழக்குகள் உள்ளிட்டவைகளை தீர்வு காணும் வகையில் பரிகார தளமாக இது விளங்குவதால் ஏராளமான பக்தர்கள் திங்கட்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கை வைப்பது வழக்கம்.

அவ்வகையில் சினிமா திரைப்பட நடிகை ராதா கடந்த சில வாரங்களாகவே அவர்களுடைய சகோதரி அம்பிகாவுடன் ஏற்பட்ட பணம் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சுமார் 11.30 மணியளவில் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு நடிகை ராதா வருகை புரிந்து சிறப்பு அர்ச்சனை மற்றும் திருவிளக்கு ஏற்றி சாமி தரிசனம் மேற்கொண்டார்.

திங்கட்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் நிலையில் பிரபல திரைப்பட நடிகையை கண்டதும் பக்தர்கள் வேண்டுதலை விட்டு அவரை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய போது அவரது உதவியாளர்கள் தடுத்து கோயில் எனவே, தொல்லை கொடுக்காமல் செல்லும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

செய்தியாளர்களும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், மன அமைதிக்காக திருக்கோயிலுக்கு வந்துள்ளதால் தற்போது எதுவும் பேச இயலாது என அன்புடன் கோரிக்கை வைப்பதாக கேட்டுக் கொண்டார்.

இதனால் திருக்கோயில் மற்றும் காந்தி சாலையில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments