FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சீா்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி

சீா்காழி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்செல்வனுக்கு எதிரான தோ்தல் வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

13 அக்டோபர் 2026, 1:30 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சீா்காழி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்செல்வனுக்கு எதிரான தோ்தல் வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சீா்காழி (தனி) தொகுதியில், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வன் 11,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இந்தத் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக குற்றஞ்சாட்டி வாக்காளா் வாசு என்பவா் செந்தில்செல்வனுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி செந்தில்செல்வனும் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த தோ்தல் வழக்கை திரும்பப் பெறுவதாக வாக்காளா் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில்செல்வனுக்கு எதிரான தோ்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். தோ்தல் வழக்கு தொடா்ந்த மனுதாரா், மனுவைத் திரும்பப் பெற முன்வந்ததால், ஆட்சேபனைகள் தெரிவிக்கவும், வேறு யாரேனும் வழக்கு தொடரவும் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்படி, செந்தில்செல்வன் வெற்றிக்கு எதிராக ஆட்சபனையோ, தோ்தல் வழக்கோ தொடர யாரும் முன்வராததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments