FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் பாதிப்பு: அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்

அரிசி, பருப்பு விலை உயர்வு விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியிருப்பது...

12 அக்டோபர் 2026, 1:26 pm IST
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் - எக்ஸ்
பகிர்:

அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால், அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து, அன்றாட பயன்பாட்டுக்கான அரிசியே கிலோ ரூ.77 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் முதல் இப்போது வரையிலான 3 மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரையிலும், 26 கிலோ மூட்டை ரூ.700 வரையிலும் உயர்ந்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், அரிசி விலை உயரவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் ரூ.1100 ஆக இருந்த 26 கிலோ எடை கொண்ட சாதாரண ரக புழுங்கல் அரிசி மூட்டை விலை இப்போது ரூ.1800 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது இந்த வகை அரிசியின் விலை கிலோ ரூ.42-லிருந்து ரூ.70 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை விலை ரூ.1400-லிருந்து ரூ.1900 ஆகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகத்திலிருந்து வரும் சோனா மசூரி அரிசி மூட்டை விலை ரூ.1400-லிருந்து ரூ.2000 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

அதேபோல், விருதுநகர் மொத்த விற்பனை சந்தையில் துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை விலை ரூ.13,200 -லிருந்து ரூ.600 உயர்ந்து ரூ.13,800 ஆக அதிகரித்துள்ளது. நயம் உளுந்தம்பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.9,100 முதல் ரூ.9,200 வரை விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மூட்டைக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.10,200 முதல் ரூ.10,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி ரூ.27 வரையிலும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.6, உளுத்தம்பருப்பு ரூ.11 வீதமும் உயர்ந்துள்ள நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை பாதிக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 22-ஆம் தேதியும், செப்டம்பர் 27-ஆம் தேதியும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அரிசி விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

மாறாக, அரிசி உள்ளிட்ட 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை கண்காணித்து வருகிறோம்; அரிசி விலை உயரவே இல்லை; இது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்படும் பொய்யான பிம்பம் தான் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அர்சி விலை கிலோவுக்கு ரூ.27 வரை உயர்ந்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலையே உயரவில்லை என்று கூறுவது மிகவும் ஆபத்தானது. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களில் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

The price of rice in Tamil Nadu has been rising steadily, with even ordinary varieties used for daily consumption reaching an alarming ₹77 per kilogram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments