ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை
ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி....
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகயுள்ளது.
இந்நிலையில், ஜெயிலர்2 படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அந்த மனுவில், படம் வெளியான முப்பது நிமிடங்களில் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
The Madras High Court has banned the illegal release of the movie Jailer 2, starring actor Rajinikanth, which is set to release the day after tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.