தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு!
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டது பற்றி...
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவில் தஞ்சை மட்டுமல்லாது திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிரசவத்திற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் தாய்மார்களின் உறவினர்களிடம் உள்ளே செல்வதற்கும்- குழந்தைகளை பார்ப்பதற்கும் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும், அதேபோல் ஆண் குழந்தை பிறந்தால் ஆயிரம் ரூபாய் - பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.
Advertisement
Advertisement
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன், ஆய்வாளர்கள் பத்மாவதி , சரவணன், அருண் பிரசாத் உள்ளிட்டோர் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள காவலர் உள்ளிட்ட பணியாளர்களிடமிருந்து கணக்கில் வராத 19,700 பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்குள்ள ஆர்எம்ஓ அலுவலகத்தில் உள்ளே ஒவ்வொரு பணியாளர்களையும் அழைத்து தனி தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Anti-Corruption Vigilance Police conducted a surprise inspection at Thanjavur Government Raja Mirasudar Hospital.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.