FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதிகள்! முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து.

14 அக்டோபர் 2026, 10:24 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

Advertisement

Advertisement

நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, தா்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் காா்த்திகேயன் ஆகிய நீதித்துறை அதிகாரிகளை சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா் என சட்ட அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

New Additional Judges for the Madras High Court: Chief Minister Vijay Extends Wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments