ஆன்லைன் டிரேடிங் என்று கூறி சென்னையில் இளைஞர்களிடம் மோசடி!
ஆன்லைன் டிரேடிங் என்று கூறி சென்னையில் இளைஞர்களிடம் மோசடி நடந்துள்ளது பற்றி..
சென்னையில் ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டியதாகக் கூறி இளைஞர்களிடம் மோசடி நடைபெற்றுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டியதாகக் கூறி அதேபோல இளைஞர்கள் பலரையும் முதலீடு செய்யவைத்து அதிக லாபம் பெற்றுத் தந்ததுபோல் காட்டி ஏமாற்றியுள்ளனர்.
இதற்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி சுமார் 40 பேரிடம் தலா ரூ. 40,000 வசூலித்து சென்னைக்கு வரவழைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பான விடியோ இணையத்தில் வெளியானதையடுத்து அதன் அடிப்படையில் 3 பேரை ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் கவர்ச்சிகரமான டிரேடிங் விளம்பரங்களை நம்பி பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆவடி மாநகர காவல் ஆணையரகம் எக்ஸ் பக்கத்தில், "திருவேற்காட்டைச் சேர்ந்த கவின், கீர்த்திவாசன் மற்றும் பார்த்திபன் ஆகிய மூவரும் tradingcrew_ என்ற இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் டிரேடிங் செய்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்டியதாக கூறி சுமார் 40 நபர்களை Markets மற்றும் MetaTrader 5 போன்ற டிரேடிங் தளங்களில் முதலீடு செய்யத் தூண்டியதின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளது.
Youth in Chennai defrauded under the guise of online trading
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.