FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘அப்துல் கலாமுக்கு அண்ணா பல்கலை.யில் சிலை அமைத்தது திமுக அரசு’ - மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்..

15 அக்டோபர் 2026, 10:56 am IST
பகிர்:

பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் என் புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.

வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.

Advertisement

Advertisement

நமது திமுக அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.

அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin pays tribute to Bharat Ratna Abdul Kalam on his birth anniversary, offering his respectful salutations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments