FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

112 நாள்களுக்குப் பிறகு... திருச்சியில் சீரமைக்கப்பட்ட பழைய காவிரி பாலம் இன்று திறப்பு!

திருச்சியில் சீரமைக்கப்பட்ட பழைய காவிரி பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

15 அக்டோபர் 2026, 6:34 pm IST
காவிரி பாலம் - படம்: தினமணி
பகிர்:

சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த திருச்சி பழைய காவிரி பாலம் இன்று திறக்கப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-38) சஞ்சீவி நகர் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. திருச்சி - சென்னை வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது, இதனருகே புதிய பாலம் கட்டப்பட்டது.

இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-இல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தப் பாலத்தில் மீண்டும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக இந்தப் பாலம் கடந்த ஜூன் 25 முதல் தற்காலிகமாக மூடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

பராமரிப்பு மற்றும் சீரமைப்புக்காக கடந்த ஜூன் 25 முதல் திருச்சி பழைய காவிரிப் பாலத்தில் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு, மூடப்பட்டது.

இதையடுத்து ரூ. 10 கோடியில் பாலத்துக்கு அடியில் உள்ள 120 பேரிங்குகள் புதிதாக மாற்றப்பட்டன. பாலத்துக்கு மேல் பகுதியில் இரண்டு தூண்களுக்கு நடுவில் உள்ள கான்கிரீட் பாதைகளை இணைக்கும் 16 பகுதிகள் புதிதாக போடப்பட்டன. நடைபாதை மேம்படுத்தப்பட்டு, பாலத்துக்கு வண்ணம் பூசப்பட்டது.

இதற்காக பாலம் முழுமையாக மூடப்பட்டிருந்ததால், மாநகரில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். திருச்சி எம்.பி. துரை வைகோவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பேசி பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், பழைய காவிரிப் பாலத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வியாழக்கிழமை (அக். 15) மாலை 4 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

summary

The old Cauvery bridge in Trichy, which had been closed for repair work, has been reopened today and is now open to traffic.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments