திரிஷாவைக் காண திரண்ட ரசிகர்களால் திணறிய கோவை!
கோவையில் திரிஷாவைக் காண திரண்ட ரசிகர்களால் பரபரப்பு....
கோவையில் தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை திரிஷா, சாலை வலம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் மொபைல் கடை திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக இன்று கலந்துகொண்ட நடிகை திரிஷா, கடையைத் திறந்து வைத்தார்.
அவரது வருகையறிந்த 500-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் பொதுமக்களும் கடை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இருப்பினும், காவல்துறையினரும் பவுன்சர்களும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். திரிஷா கடைக்கு வருகைபுரியும் போது, திரண்டிருந்த ரசிகர்களும் பொதுமக்களும் அவரைக் காண்பதற்கு ஆர்வமுடன் முன்னேறி வந்ததால் அங்குப் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பவுன்சர்களும் காவல்துறையினரும் மிகவும் சிரமப்பட்டு அவர்களைத் தடுத்தனர்.
கடை திறப்பு விழாவை முடித்துக்கொண்டு புறப்படும் பொழுது, நடிகை திரிஷா ரசிகர்களையும் பொதுமக்களையும் பார்த்துக் கையசைத்ததோடு, சிலருக்குக் கைகுலுக்கவும் செய்தார்.
பின்னர், சுமார் 100 மீட்டர் தூரம் காருக்குள் இருந்தவாறு சாலை வலம் சென்று ரசிர்களை உற்சாகப்படுத்தினார்.
முன்னதாக, அவர் ரசிகர்கள் மத்தியில் மைக் மூலம் பேச முயன்றபோது, மைக் வேலை செய்யாததால் பேசாமல் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Trisha, who arrived to participate in a private mobile store opening ceremony in Coimbatore, delighted fans by taking a road trip/procession.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.