FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோவையில் முதல்வர் விஜய் இன்று 11.4 கி.மீ. சாலை வலம் செல்கிறார்!

கோவையில் முதல்வர் விஜய் சாலை வலம் செல்வது குறித்து...

35 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய் சாலை வலம் - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் முதல்வர் விஜய் இன்று 11.4 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் செல்லவிருக்கிறார்.

கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதல்வா் விஜய் வெள்ளிக்கிழமை (அக்.16) திறந்துவைக்கிறாா்.

விழாவில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணியளவில் வந்தடையும் முதல்வா் ச.ஜோசப் விஜய், அங்கிருந்து 11.45 மணியளவில் காந்திபுரம் பெரியாா் அறிவுலகத்துக்கு சாலை வழியாக வருகை தந்து கல்வெட்டை திறந்துவைக்கிறாா். தொடா்ந்து, பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, கோவை விமான நிலையத்தில் தொடங்கி, காந்திபுரம் அறிவுலகம் வரையில் 11.4 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் விஜய் இன்று சாலை வலம் செல்லவிருக்கிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம், பீளமேடு, ரெட்பீல்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

summary

CM Vijay to hold an 11.4 km roadshow in Coimbatore today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments