FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புலி தாக்கும்போது யானை மிரண்டு ஓடும்: தவெகவை விமர்சித்த சீமான்

கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தவெகவை விமர்சித்து சீமான் பேசியது குறித்து...

1 செப்டம்பர் 2026, 8:35 pm IST
சீமான் - யூடியூப்
பகிர்:

புலி தாக்கும்போது யானை மிரண்டு ஓடும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப். 1) விமர்சித்தார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இது தொடர்பாக சீமான் பேசியதாவது:

''கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால், அது குறித்து சட்டப்பேரவையிலும் பேசவில்லை, வேறு எங்குமே ஆளும் கட்சியினர் பேசவில்லை.

Advertisement

Advertisement

ராணுவத்தை அனுப்புங்கள், துணை ராணுவத்தை அனுப்புங்கள், நாங்கள் அமைதியாக இருப்போம் என்று நினைக்காதீர்கள். எங்கள் மக்கள் தற்போது மயக்கத்தில் உள்ளனர். இந்த நிலை விரைவில் மாறும்.

புலி தாக்கும்போது யானை மிரண்டு ஓடும். அது இரண்டு யானையாக இருந்தால் என்ன, இரண்டாயிரம் யானைகாக இருந்தால் என்ன?

கர்நாடகத்தில் தமிழர்களை சுட்டதைக் கேட்க நாதியில்லை. அவையிலும் பேசவில்லை வேறு எங்கும் பேசவில்லை. பூலித்தேவன் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

அனிதா ஏன் இறந்தார் என்ற காரணம் தெரியாது? 5 ஆண்டுகளில் ஆட்சி நடக்கப்போவதில்லை; காட்சிதான் நடக்கும். ரூல் நடக்காது ரீல் தான் நடக்கும்'' என சீமான் குறிப்பிட்டார்.

summary

An elephant panics and runs when a tiger attacks: Seeman criticizes TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments