சட்டப்பேரவையில் தந்தை உரையைக் காண இன்பநிதி வருகை!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இன்பநிதி வருகை தந்திருப்பது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி இன்று வருகை தந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. 2026-27 ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு தாக்கல் செய்துள்ளது.
வருகின்ற செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள், கேள்வி நேரங்கள் ஆகிய அலுவல்கள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி இன்று வருகை தந்துள்ளார்.
பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து தனது தந்தை உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பேச்சை பார்வையிட்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்களை நேரில் காண்பதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் அனுமதி சீட்டைப் பெற வரிசையில் காத்திருக்கின்றனர்.
Inbanidhi arrives at the TN Legislative Assembly to witness his father's speech!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.