34% முட்டாள்கள்? தவெகவினரை கடுமையாக விமர்சித்த திமுக முன்னாள் அமைச்சர்
தமிழகத்தில் தவெகவுக்கு வாக்களித்தவர்களை முட்டாள்கள் என திமுக முன்னாள் அமைச்சர் காந்தி கடுமையாக விமர்சித்தது குறித்து...
தமிழகத்தில் தவெகவுக்கு வாக்களித்தவர்களை முட்டாள்கள் என திமுக முன்னாள் அமைச்சர் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக முன்னாள் அமைச்சர் காந்தி பேசியதாவது, "இன்று தமிழ்நாட்டின் நிலைமை என்ன? ஆட்சி பொறுப்பேற்று 120 நாள்களாகி விட்டன. வெறும் ரீல்கள் மட்டும் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் (திமுக) செய்தவற்றுக்கு பெயர் மாற்றம் செய்கின்றனர். விவசாயக் கடன் தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் என்றெல்லாம் கூறினர்.
ராணிப்பேட்டையில் ஜேகே டயர் தொழிற்சாலையை மூடச் சொல்லி தவெக எம்எல்ஏ கேட்கிறார். உடனே அமைச்சர் கீர்த்தனா எழுந்து, தொழிற்சாலைதான் முக்கியம் எனச் சொல்கிறார். அவருக்கு அடுத்ததாக மாசுத் தடுப்பு அமைச்சர் எழுந்து பதிலளிக்கிறார்.
Advertisement
Advertisement
அவர்கள் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றையாவது செய்திருக்கிறார்களா? பெயர் மாற்றம் மட்டுமே செய்திருக்கிறார்கள்.
மக்களும் ஏமாந்து வாக்களித்து விட்டனர். தமிழ்நாட்டில் ஒரு கோடியே 73 லட்சம் முட்டாள்கள் இருக்கின்றனர். மாநிலத்தின் 34 சதவிகித முட்டாள்கள் செய்த வேலைதான் இந்த ஆட்சி மாற்றம்" என்று தெரிவித்தார்.
Former DMK Minister R. Gandhi harshly criticized TVK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.