FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம்

பேரவையில் பதிலுரை வழங்க முதல்வர் விஜய் 3 நாள்கள் பயிற்சி பெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்தது குறித்து...

6 செப்டம்பர் 2026, 3:52 pm IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவையில் பதிலுரை வழங்க முதல்வர் விஜய் 3 நாள்கள் பயிற்சி பெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மதுரை அதிமுக மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களுடன் பேசியதாவது, "தவெகவில் யாரும் தொண்டர்களாக இல்லை, ரசிகர்களாகவே இருக்கின்றனர். அதைத்தான் கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

சட்டப்பேரவையில் சண்டைதான் நடந்து கொண்டிருக்கிறது. திங்கள்கிழமை பதிலுரை வழங்குவதற்கு முதல்வர் விஜய் பயிற்சி எடுத்து வருவார்.

Advertisement

Advertisement

படப்பிடிப்புக்கு வருவதுபோல, பயிற்சி எடுத்துக்கொண்டு, சட்டப்பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவார். செய்தியாளர்களும் அதைத்தான் செய்திகளில் போடுவீர்கள். மக்களின் பிரச்னைகளான வெங்காய விலை உயர்வு, அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வைப் பற்றி செய்திகளில் போட மாட்டீர்கள்.

சட்டப்பேரவையில் முதல்வர் பஞ்ச் டயலாக் பேசினார் என்றுதான் செய்தியாகப் போடுவீர்கள். அதற்கு பயிற்சி செய்வதற்காகத்தான் அவருக்கு 3 நாள்கள்.

சட்டப்பேரவையில் முதல்வர் உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டும். எம்எல்ஏ-க்களோ எதிர்க்கட்சித் தலைவரோ கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் பதிலளிக்கவில்லை என்றாலும், முதல்வர் பதிலளிக்க வேண்டும். இதுதான் காலங்காலமான வரலாறு.

ஆனால், இவர் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்து பேசுகிறார். ஸ்டார்ட் என்று சொன்னால்தான் பதில் சொல்வார்போல" என்று தெரிவித்தார்.

summary

Former ADMK Minister Sellur Raju criticized CM Vijay, stating that he has been undergoing training for 3 days to speak in the Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments