மிஸ்ட்ர் க்ளீன் என்று சொல்லிக் கொள்பவர்களே! ஒரு மணி நேரம் பேசிய முதல்வர் விஜய்!
மிஸ்ட்ர் க்ளீன் என்று சொல்லிக் கொள்பவர்களே என்று திமுகவினரை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய் ஒரு மணி நேரம் பேரவையில் உரையாற்றினார்.
எதைப் பற்றி பேசினாலும் ஆதாரம் ஆதாரம் என்று கேட்பார்கள். ஆதாரங்களை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு என்று பேரவையில் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சம்பளங்கள் சட்டத் திருத்த மசோதாவை முதல்வர் தாக்கல் செய்தார்.
பின்னர், காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். 15 முதல் 20 நிமிடங்கள் வரை காவல்துறை மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்துப் பேசிய முதல்வர் விஜய், திடீரென திமுக பற்றி பேசத் தொடங்கினார். அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். சரியாக ஒரு மணி நேரம் பேரவையில் முதல்வர் விஜய் உரையாற்றினார்.
Advertisement
Advertisement
பேரவையில் பேசிய முதல்வர் விஜய், ஆதாரங்கள் ஆதாரங்கள் என்று கேட்கிறீர்களே, இதற்கெல்லாம் நாடாளுமன்றம் செல்ல வேண்டாம், நமது நூலகத்திலேயே சர்காரியா ஆணையத்தின் புத்தகம் உள்ளது. அதில் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
மிஸ்டர் க்ளீன், மிஸ்டர் க்ளீன் என்று சொல்லிக் கொள்பவர்களே, திமுக ஆட்சியின் முறைகேடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம். அப்போதே அப்படி என்றால் இப்போது எப்படி என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும், அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையில், பல்வேறு முறைகேடுகள் குறித்து பட்டியலிட்ட விஜய், திமுகவினர் எதைச் செய்தாலும் குடும்பமாகத்தான் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வந்த பார்களில், கட்சி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் கரூர் கேங் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் பெயர் அல்லவா கரூர் கேங். இதற்கு தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள நமக்கே இவ்வளவு ஆர்வமாக இருக்கிறதே, மக்களுக்கு இருக்காதா என்றும் விஜய் கூறினார்.
To those who claim to be 'Mr. Clean'! Chief Minister Vijay spoke for an hour!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.