வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்றது.
சென்னை மாநகராட்சியில் மீட்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள இதுவரை செய்யப்பட்ட பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார், துறை சார்ந்த அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Northeast Monsoon! Chief Minister Vijay holds meeting with officials!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.