FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய 15 அதிகாரிகள் நியமனம்!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய 15 அதிகாரிகளை நியமித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு..

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 10:34 am IST
சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய 15 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும். குறிப்பாக நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்யும்.

இதையடுத்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்பொருட்டு, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 15 அதிகாரிகளை நியமித்துள்ளார்.

Advertisement

Advertisement

அலுவலக நேரத்திற்கு முன்பாக காலையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல சென்னையில் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் இந்த அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

summary

Northeast Monsoon: 15 officials appointed to inspect stormwater drain works in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments