செப். 16-ல் காலாண்டுத் தேர்வு! அட்டவணை வெளியீடு!
1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது குறித்து....
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று (செப். 9) வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கலவி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதில், 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
3 முதல் 10 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும்
11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Quarterly exams on Sept. 16! Schedule released
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.