ஓவிய, சிற்பக் கலைஞா்களுக்கு நிதியுதவி: அக். 1-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஓவிய, சிற்பக் கலைஞா்கள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரசின் நிதியுதவியைப் பெற அக்.1-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
ஓவிய, சிற்பக் கலைஞா்கள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரசின் நிதியுதவியைப் பெற அக்.1-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு மூலம் ஓவிய சிற்பக் கலைஞா்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவா்களது கலைப் படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியை தனிநபா் கலைக் காட்சியாக நடத்த ஒரு நபருக்கு ரூ.25,000 வீதம் 10 கலைஞா்களுக்கும் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைஞா்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்த ஒரு குழுவுக்கு ரூ.50,000 வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவா்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவா்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை - ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச் செம்மல் விருது பெற்றவா்கள் கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவா்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவா்கள் இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோா் இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.
Advertisement
Advertisement
விண்ணப்பதாரா்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு, கைப்பேசி எண், சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (ஏ4 அளவு) அவரவா்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து, ‘கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளா்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூா், சென்னை -600 008’ என்ற முகவரிக்கு அக்.1-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கூடுதல் தகவல் பெற 044-28193195 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.