இன்றைய செய்திகள் செப். 10 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
அதிமுகவுக்கு ஆதரவு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி!
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
’டம்மி சிஎம்’
சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ரயில் டிக்கெட் முன்பதிவு
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பிவர ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் முடிந்தது.
பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ
மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியானதாகவும், 87 பேர் மாயமாகியுள்ளதாக கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மறந்துட்டீங்களா தம்பி
வீட்ல என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.