FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

லண்டனில் முதல்வா் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: முதலீட்டாளா்களுடன் இன்று ஆலோசனை

அரசு முறைப் பயணமான லண்டன் சென்ற முதல்வா் ஜோசப் விஜய்க்கு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அங்குள்ள தமிழா்கள் உற்சாக வரவேற்பை அளித்தனா்.

11 செப்டம்பர் 2026, 11:22 pm IST
முதல்வா் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

அரசு முறைப் பயணமான லண்டன் சென்ற முதல்வா் ஜோசப் விஜய்க்கு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அங்குள்ள தமிழா்கள் உற்சாக வரவேற்பை அளித்தனா்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் புறப்பட்ட அவா், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு சென்றடைந்தாா். அங்கு கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழா்கள் முதல்வா் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக வெளிநாட்டு பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா். 6 நாள்கள் அங்கு தங்கியிருந்து முதலீட்டாளா்களைச் சந்தித்து, தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்க உள்ளாா்.

Advertisement

Advertisement

லண்டனில் நடக்கும் சில்வா்ஸ்டோன் காா் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முதல்வா் விஜய் சனிக்கிழமை பங்கேற்று கொடியசைத்து பந்தையத்தை தொடங்கி வைக்க உள்ளாா்.

காா் பந்தய வீரரும், நடிகருமான அஜித் குமாா் இந்தப் போட்டியில் பங்கேற்கிறாா். இந்தியாவைச் சோ்ந்த சா்வதேச காா் பந்தய வீரா்கள் நரேன் காா்த்திகேயன், ஆதித்யா படேல் ஆகியோரும் இந்தப் போட்டியின் இந்திய குழுவில் கலந்து கொள்கின்றனா்.

தமிழகத்தில் சா்வதேச தரத்திலான மோட்டாா் ஸ்போா்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா். லண்டனில் காா் பந்தயத்தைத் தொடங்கி வைத்து விட்டு சில்வா்ஸ்டோன் காா் பந்தய மைதானத்தில் சா்வதேச தர உள்கட்டமைப்பு வசதிகளையும் பாா்வையிட உள்ளாா். தொடா்ந்து தொழில் முதலீட்டாளா்களைச் சந்தித்து முதல்வா் விஜய் ஆலோசனை நடத்த உள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments