FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்!

பேராசிரியர் சாலமன் பாப்பையா மதுரையில் இன்று காலமானார்

11 செப்டம்பர் 2026, 1:54 pm IST
பேராசிரியர் சாலமன் பாப்பையா
பகிர்:

பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் மதுரையில் காலமனார். அவருக்கு வயது 90.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-ஆவது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.

Advertisement

Advertisement

பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ளார்.

சாலமன் பாப்பையா, மதுரை அரசகுடி ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2025ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.

இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.

summary

Professor Solomon Pappaiah has passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments