FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ் மேடையின் பொற்காலம் மறைந்தது! - சாலமன் பாப்பையா மறைவுக்கு விஜய் சேதுபதி இரங்கல்!

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல்...

11 செப்டம்பர் 2026, 5:32 pm IST
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல்... - கோப்புப் படம் | எக்ஸ்
பகிர்:

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் மதுரையில் இன்று (செப். 11) காலமானார்.

அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைக்கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. பட்டிமன்றத்தை வீடு வீடாக கொண்டு சென்ற, தமிழை எளிமையாக, அழகாக பேசி புரிய வைத்த சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு.

அவரது சொற்கள் வழி வழியாக தமிழுக்குள் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் கூறியுள்ளார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

summary

Actor Vijay Sethupathi has expressed his condolences over the passing of Tamil scholar Solomon Pappaiah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments