FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுகவினரின் இழிவான உரை; ஆ. ராசா பேச்சுக்கு விசிக கண்டனம்!

திமுகவினரின் இழிவான உரையை விசிக கண்டிக்கிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளது குறித்து...

13 செப்டம்பர் 2026, 8:21 am IST
சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு - கோப்புப்படம்
பகிர்:

திமுகவினரின் இழிவான உரையை விசிக கண்டிக்கிறது என சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

”கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் ஆ. ராசா.

Advertisement

Advertisement

இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும். “எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? அதானால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், ஆ.ராசா அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.

முதல்வரை ஓடுகாலி என சேகர்பாபு உளறியதை ‘பீப்’ போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி குறித்து பாஜகவை சார்ந்த எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள் இப்போது, திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது.

பாஜக ஆ. ராசா, திமுக எச்.ராஜா என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார்.

summary

Vanni Arasu, Minister for Social Justice, has stated that the VCK condemns the derogatory remarks made by DMK members.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments