FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தடையற்ற மின் விநியோகம்! கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு

மாநிலத்தில் தடையற்ற மின் விநியோகத்துக்காக கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது குறித்து...

13 செப்டம்பர் 2026, 2:53 pm IST
தமிழ்நாடு மின்சார வாரியம் - கோப்புப் படம்
பகிர்:

மாநிலத்தில் தடையற்ற மின்சாரம் விநியோகம் வழங்கப்படுவதற்காக கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருப்பதாவது, "கூடுதலாக 2,000 மெகாவாட் மின் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

மேலும், களப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு 24 மணிநேரமும் செயல்படும் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.

summary

TNEB has announced that an additional 2,000 MW of power is being procured to ensure uninterrupted electricity supply in the state

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments