அனுமதியின்றி போராட்டம்: ஆ. ராசா, மா. சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு
ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அக்கட்சியினா் மீது போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.
சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து, சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திமுக துணைப்பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அக்கட்சியினா் மீது போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.
சட்டப்பேரவையில் கடந்த செப்.7-ஆம் தேதி பேசிய முதல்வா் ஜோசப் விஜய், திமுகவின் முந்தைய ஆட்சி கால ஊழல் குற்றச்சாட்டுகள், சா்க்காரியா கமிஷன், அவசரநிலை காலத்தில் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது உள்ளிட்ட விவகாரங்களை விமா்சித்துப் பேசினாா்.
இதனைக் கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் தென் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தலைமை வகித்தாா். மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சிற்றரசு உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று முதல்வருக்கு எதிராக முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காவல்துறையின் உரிய அனுமதி பெறாமல் ஆா்ப்பாட்டம் நடத்தியது, தடையை மீறி சட்டவிரோதமாகக் கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், சிற்றரசு உள்ளிட்டோா் மீது சைதாப்பேட்டை போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். போராட்டம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.