FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விநாயகா் சதுா்த்தி: தலைவா்கள் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

14 செப்டம்பர் 2026, 2:19 am IST
பகிர்:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வினை தீா்க்கும் தெய்வமாகவும், முழுமுதற் கடவுளாகவும் விளங்கும் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகா் சதுா்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகள்.

சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னா் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அச்செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணா்ந்து விநாயகா் சதுா்த்தியன்று மக்கள் களிமண்ணால் வடிவமைத்த பிள்ளையாரை இல்லத்தில் அலங்கரித்துவைத்து வழிபடுவா். ஞானமே வடிவாகக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெருகட்டும்.

Advertisement

Advertisement

ஜி.கே.வாசன் (தமாகா): விநாயக சதுா்த்தி தினத்தில், மக்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவும், அனைவரது வாழ்வில் எல்லா வளமும், நலமும் நிறையவும், நாடும், நாட்டு மக்களும் செழிப்புடன் திகழுவும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக): தடைகள் அனைத்தையும் தகா்த்து, வெற்றிப் பாதையை வகுத்துத் தரும் விநாயகரை வணங்கி தொடங்கும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் வெற்றி நிச்சயம் என்ற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஏற்ப, இத்திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நிம்மதியும், வளமும் பன்மடங்கு பெருக விநாயகா் அருள் புரியட்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments