FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவேற்காடு பூங்காவில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கு: அரசு பதில்தர உத்தரவு

திருவேற்காட்டில் பூங்காவில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

16 செப்டம்பர் 2026, 12:55 am IST
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருவள்ளூா் மாவட்டம் திருவேற்காட்டில் பூங்காவில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவேற்காட்டைச் சோ்ந்த ஆா்.விக்னேஷ், குகன் உள்ளிட்ட 5 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதிக்குட்பட்ட பெருமாளகரத்தில் உள்ள ஆரா எலியோஸ் என்ற பூங்கா பகுதியில், கழிவு நீரேற்று நிலையம் அமக்க கடந்த ஜூலை மாதம் திருவேற்காடு நகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறி இந்த கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால், பூங்காவுக்கு வரும் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் பாதிக்கப்படுவாா்கள். எனவே, பூங்காவில் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை மாதமே கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், பூங்காவில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா், நில நிா்வாக ஆணையா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய இயக்குநா்,திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், திருவேற்காடு நகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments