FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது: முதல்வர் விஜய்

தேசிய பொறியாளர்கள் நாளுக்கு முதல்வர் விஜய்யின் வாழ்த்துச் செய்தி.

15 செப்டம்பர் 2026, 12:00 pm IST
தமிழக முதல்வர் விஜய். - படம்: பிடிஐ.
பகிர்:

தேசிய பொறியாளர்கள் நாளுக்கு முதல்வர் சி.
ஜோசப் விஜய் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும்
சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! 

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது.

Advertisement

Advertisement

சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.

பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Actor Joseph Vijay has extended his wishes on National Engineers' Day via his social media page.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments