FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீனாட்சி சுந்தரேசுவரர் கும்பாபிஷேகம்! கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு!

மீனாட்சி சுந்தரேசுவரர் கும்பாபிஷேக முனேற்பாடுகள் பற்றி..

15 செப்டம்பர் 2026, 2:57 pm IST
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு - video crop
பகிர்:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்துக் கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை திரு. கொ. வீர ராகவ ராவ், நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் இயக்குநர் திரு. ப. மதுசூதன் ரெட்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் முனைவர் சி. பழனி ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில், திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments