பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!
முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது பற்றி...
லண்டனில் நடைபெறவிருந்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் நிகழ்ச்சி ஒன்று, பாதுகாப்பு காரணம் கருதி செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான குழு லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வரும் முதல்வர் விஜய், அவர் தங்கியிருக்கும் தி ஷர்ட் நட்சத்திர விடுதிக்கு வெளியே மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இதனை அறிந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் நட்சத்திர விடுதிக்கு வெளியே குவிந்ததால், நிகழ்வை ரத்து செய்யக் கோரி லண்டன் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர், நட்சத்திர விடுதிக்கு வெளியே கூடியிருந்த மக்களிடம், பாதுகாப்பு காரணம் கருதி நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக மைக் மூலம் அறிவித்தார்.
இதுதொடர்பாக நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், “இது நியாயமானதுதான் என்றாலும், அனைவரும் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் காணும் கூட்டத்தைப் போன்றுள்ளது” என்றார்.
கடந்த செப். 10 ஆம் தேதி பிரிட்டன் சென்ற முதல்வர் விஜய், தனது பயணத்தை முடித்துவிட்டு, இன்று சென்னை புறப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay's London event cancelled due to security concerns!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.