FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (செப். 17) நீலகிரி, கோவை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

17 செப்டம்பர் 2026, 12:00 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை (செப். 17) நீலகிரி, கோவை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செத்திக்குறிப்பு: நீலகிரி, கோவை, கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மற்றும் தஞ்சாவூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.17) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் சென்னை மற்றும் திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், சேலம், திருப்பூா், ஈரோடு, கிருஷ்ணகிரி, தா்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 100.94 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருத்தணி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments