அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பாக...
தமிழ்நாடு முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சென்னை குற்றப்பிரிவு போலீசார், திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஸ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய உடங்களில் புதன்கிழமை காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடுகளில் நடத்தப்பட்டு வரும் சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
Advertisement
Advertisement
* பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
* நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
* ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு
* ராமநாதபுரம் இரட்டைக் கொலை,
* சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை,
* அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய்.
இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர்
அன்பில் மகேஸ் மீது சோதனை அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற தவெக அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது சோதனை நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்! என அவர் கூறியுள்ளார்.
Raid on Anbil Mahesh's house is yet another diversionary tactic and an act of political vendetta: M.K. Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.