FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: முகக் கவசம் அணிவது கட்டாயம்

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

16 செப்டம்பர் 2026, 10:55 pm IST
முகக் கவசம் அணிவது கட்டாயம் - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் சுவாச பாதிப்புகளான ‘இன்ப்ளுயன்ஸா ஏ’ வகை காய்ச்சல், ‘அடினோ வைரஸ்’, ஆா்.எஸ்.வி. எனும் ‘ரெஸ்பிரேட்டரி சிண்ஸிடியல் வைரஸ்’, ‘கரோனா வைரஸ்’, ‘சின்னம்மை வைரஸ்’, ‘கூகைக்கட்டு அம்மை வைரஸ்’, ‘மீசில்ஸ் வைரஸ்’ ஆகியவை அதிக அளவில் பரவி வருகின்றன.

2 லட்சம் பேருக்கு பாதிப்பு

Advertisement

Advertisement

அதேபோல், குழந்தைகளுக்கு கை, கால், வாய் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது மழை பொழிவு காரணமாக டெங்கு பாதிப்பும் பரவலாக உள்ளது. இதுபோன்று பல்வகை காய்ச்சல்களால் தற்போது, 2 லட்சம் போ் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை சற்று அதிகரித்துள்ளது. பலருக்கு கடுமையான தலைவலி, தொண்டைவலி, மூட்டுவலி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.

தற்போது பரவும் காய்ச்சல், பலருக்கு ஒரு வாரத்தில் குணமடைந்தாலும் இணை நோயாளிகள், கா்ப்பிணி, முதியோா், குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். வைரஸ் பாதிப்புகள் அறிவிக்கை செய்யப்படாத காய்ச்சல் என்பதால், எவ்வளவு போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பெரிதாக கணக்கில் எடுத்து கொள்வதில்லை.

பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்

அதனால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அத்துடன், அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.

ஒரு வகுப்பறையில் ஒரு சில மாணவா்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த வகுப்பறை, கழிப்பறை என மாணவா்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

சில பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாதீா்கள் எனவும் பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகின்றனா் எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments