FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முன்பு லஞ்சம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள்.. இப்போது அப்படியில்லை: என்ன சொல்கிறார் இபிஎஸ்?

முன்பு லஞ்சம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள், இப்போது அப்படியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி..

17 செப்டம்பர் 2026, 1:38 pm IST
எடப்பாடி பழனிசாமி - file photo
பகிர்:

முன்பெல்லாம் லஞ்சம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள், இப்போது அப்படியில்லை, இவ்வளவு கொடுக்க வேண்டும் என டிமேண்ட் செய்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லையென்றால் வெளி சந்தையில் வாங்குவது ஏன்? 2000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வாங்கப்படுகிறது. மின்வெட்டு இல்லை என அமைச்சர் கூறுகிறார். ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசும் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு நேரிடுகிறது. தமிழக அமைச்சர் பேட்டி அளிக்கும்போதே மின்வெட்டு ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழக அரசுக்கு கடன் சுமை இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? கடன் சுமை சீரானதும் கட்டிக் கொள்ளலாமே, அதுவும் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, குடியிருப்புகள், பள்ளிகள் இருக்கும் பகுதியில் அமையக் கூடாது எனவும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

முதல்வர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் முதலீடு ஈர்ப்புச் சுற்றுலாவா? இல்லை இன்பச் சுற்றுலாவா? என்றும் பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். லண்டனில் முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் செல்லாதது ஏன்? தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுடன் லண்டனில் சென்று ஒப்பந்தம் செய்வது ஏன்?

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக விரைவில் ஆதரவு தெரிவிக்கும்.

கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை என தமிழ்நாட்டில் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பின்பு டிமேண்ட் செய்து லஞ்சம் வாங்குகிறார்கள்.

ஊழலை ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகே அதிக ஊழல், முன்பெல்லாம் கொடுத்த லஞ்சத்தை வாங்கிக் கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் டிமேண்ட் செய்து வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தும்போது பணம் எப்படி கைப்பற்றப்படுகிறது? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியிருக்கிறார்.

நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். குதிரை பேரம் நடத்தி அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்களை தவெகவில் இணைத்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வைத்து திணிக்கப்பட்ட தேர்தல் என்று தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளே கூறுகிறார்கள். இந்த தேர்தலில் மக்கள் தவெகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் பழனிசாமி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments