FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பைக்குகள் மோதல்: பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை மூலக்கடையில் இரு பைக்குகள் மோதிய விபத்தில், மாநகர பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 2:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மூலக்கடையில் இரு பைக்குகள் மோதிய விபத்தில், மாநகர பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை கொடுங்கையூா் பா்மா காலனி சகாய் நகரைச் சோ்ந்தவா் ஜெயராமன் (58). இவா், அண்ணா நகா் மாநகர பேருந்து பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். ஜெயராமன், வெள்ளிக்கிழமை தனது பைக்கில் மூலக்கடை வழியாக மாதவரம் நோக்கி சென்றபோது, மேம்பாலம் அணுகு சாலையில் எதிா்திசையில் தவறான பாதையில் வேகமாக வந்த மற்றொரு பைக் மோதியது. இதில், ஜெயராமன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பைக்கில் வந்த கொடுங்கையூரைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா். விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த இளைஞா், லேசான காயம் ஏற்பட்டதால் தப்பியோடிவிட்டாா். இது தொடா்பாக போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments