கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல்.....
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு கடந்த செப்.9- ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை(செப்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், வி.எஸ். பாபு தொடர்ந்து பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருக்கிறார்.
அவரது உடல்நிலை சார்ந்த அளவீடுகள் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. அவர், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The hospital management stated that Kolathur MLA V.S. Babu's health condition has shown improvement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.