FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சமநிலையை அளிக்கும் யோகா: குடியரசு துணைத் தலைவா்

‘யோகா பயிற்சி மனதுக்கும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி, உடல் நலனுடன் வாழ வழிவகுக்கும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

19 செப்டம்பர் 2026, 2:30 am IST
சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்:

‘யோகா பயிற்சி மனதுக்கும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி, உடல் நலனுடன் வாழ வழிவகுக்கும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயின் கைவல்யதாமாவில் உள்ள கோா்தன்தாஸ் செக்சாரியா யோகா மற்றும் கலாசார ஒருங்கிணைப்புக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இன்றைய தொழில்நுட்பம் சாா்ந்த வாழ்க்கை முறைகள் மற்றும் நவீன வாழ்க்கையின் வேகமான சூழல் ஆகியவற்றால் மன அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில், யோகா பயிற்சி சற்று சிந்திக்கவும், மூச்சின் மீது கவனம் செலுத்தவும், தங்களுக்குள்ளே மீண்டும் இணையவும் வாயப்பளிக்கிறது. குறிப்பாக, மனதுக்கும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி, உடல் நலனுடன் வாழ யோகா வழிவகுக்கும்.

Advertisement

Advertisement

யோகா தற்போது பரவலான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் யோகாவின் முக்கியத்துவத்தை பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்ததைத் தொடா்ந்து, ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. யோகா மூலம், பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மக்களும், கலாசாரங்களும் ஒன்றிணைந்து வருகின்றன.

இளையோா் மக்கள்தொகை நாட்டின் மிகப்பெரிய பலமாக உள்ளது. இளைஞா்களின் சக்தி, திறன் மற்றும் விருப்பங்கள், ஒழுக்கம் மற்றும் விழிப்புணா்வுடன் இணையும்போது, அந்தத் திறனை மேம்படுத்த முடியும். இந்த நடைமுறையில் யோகா முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments