FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

15 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

15 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு...

19 செப்டம்பர் 2026, 11:11 pm IST
மழைக்கு வாய்ப்பு - படம்: ENS
பகிர்:

நீலகிரி, கோவை, கடலூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடக்கு கடலோர ஆந்திரம் முதல் மன்னாா் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு - தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், பெரம்பலூா், அரியலூா், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (செப். 20, 21) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், கரூா், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 20), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 100.4, கரூா் பரமத்தி - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), விக்கிரவாண்டி, நேமூா் (விழுப்புரம்) சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) பகுதிகளில் 70 மி.மீ. மழை பதிவானது.

summary

Chance of heavy rain in 15 districts today and tomorrow.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments