மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்பு
மலேசிய பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டது குறித்து...
மலேசியா தேசிய பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் மாணவர் பாரதிதாசனின் ஆராய்ச்சிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
தேனியை சேர்ந்த பாரதிதாசன், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மலேசியா தேசிய பல்கலைக் கழகத்தில் இரண்டாமாண்டு பிஎச்டி ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வருகிறார்.
இந்த நிலையில், கல்வி நிதி தாமதமானதால் தன்னுடைய படிப்பு மற்றும் ஆராய்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகத்தில் பாரதிதாசன் காணொலி வெளியிட்டார். இவர் வெளியிட்ட விடியோவைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர், மாணவருக்கு உரிய கல்வித் தொகை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், பாரதிதாசனின் விடியோ அரசியல் விவாதமாகவும் மாறியது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மாணவர் படிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்காகச் சமர்ப்பித்த ஆவணங்கள் ஏற்புடையதாக இல்லாதது குறித்து மாணவரிடம் விளக்கம் கோரியபோதும், அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லை என சமூக நீதித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை இரு நாள்களில் நிச்சயம் வழங்கப்படும் என சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு வெள்ளிக்கிழமை (செப். 18) உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு வழங்கப்படும் கல்வித்தொகையை அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றும் பணி வெள்ளிக்கிழமை மாலையிலேயே தொடங்கப்பட்டதாகவும், இன்றும் நாளையும் வங்கிகள் விடுமுறை என்பதால் திங்கள்கிழமைக்குள் (செப். 21) பாரதிதாசனுக்கு முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என சமூக நீதித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் பாரதிதாசனுக்கு ஆராய்ச்சிப் படிப்புக்காக சமூக நீதித் துறை சார்பில் தற்போது ரூ. 23.95 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
Educational funds have been released for Bharathidasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.