FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குடியரசு துணைத் தலைவர் நாளை கோவை வருகை! ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை தருவது குறித்து...

43 வினாடிகள் முன்பு
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை வருகிறார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திங்கள்கிழமை (செப். 21) நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இதனையொட்டி, தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, நாளை பிற்பகல் 12.35 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை ஆட்சியர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கவுள்ளனர். மேலும், குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, கோவையில் இன்று (செப். 20) மாலை 5 மணிமுதல் செப். 22 காலை 11 மணிவரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பின்னர், அங்கிருந்து குன்னூருக்கு சென்று, பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் குன்னூர் தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்க நூற்றாண்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, கோவை மற்றும் குன்னூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஆளில்லா வான்வழி ஊர்திகளோ ட்ரோன்களோ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களோ இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளோ பறக்கவிடப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

summary

Vice President C.P. Radhakrishnan to visit Coimbatore tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments