தவெகவினருக்காக எங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடியாது! பெ. சண்முகம் பதில்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் பேட்டி..
அனைத்து ஆட்சிக் காலத்திலும் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு நிலைகளிலும் இருந்திருக்கிறோம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கூறினார்.
திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா? என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
Advertisement
Advertisement
"3 கோப்புகள் தன் மேசையில் இருப்பதாகவும் அதை எப்போது வேண்டுமானாலும் திறப்போம் என்று முதல்வர் கூறுகிறார். அவர்கள் ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. யார் ஊழல் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சார்பாக நான் வழிமொழிகிறேன்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எங்களைக் கேள்வி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அனைத்து ஆட்சி காலத்திலும் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு நிலைகளிலும் இருந்திருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவும், மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு இதுதான். எங்களுடைய அணுகுமுறை தெரியாதவர்கள் எங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கிறார்கள். அவர்களுக்காக எங்கள் அணுகுமுறையை நாங்கள் மாற்றிக்கொள்ள முடியாது. ஆதரவு, எதிர்ப்பு, இடித்துரைப்பது, எடுத்துரைப்பது என எல்லாம் தொடரும்.
தலைமைச் செயலகம் குறித்து முதல்வர் இறுதி முடிவெடுக்காமல் அரசாணை வெளியிட்டது எப்படி? அப்படியெனில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
We cannot alter our approach for the sake of TVK members: CPIM P. Shanmugam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.