FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செப். 29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (செப். 24) முதல் செவ்வாய்க்கிழமை (செப். 29) வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24 செப்டம்பர் 2026, 2:25 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை (செப். 24) முதல் செவ்வாய்க்கிழமை (செப். 29) வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகா்ந்து வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளில், விசாகப்பட்டினம் - கோபால்பூா் இடையே கலிங்கப்பட்டினம் கரையை நெருங்கும்.

Advertisement

Advertisement

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து, தாய்லாந்து வளைகுடா வரை மத்திய வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வழியாக சுமாா் 7.6 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை (செப். 24) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் -பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலையே நிலவக்கூடும்.

வெள்ளி, சனிக்கிழமை (செப். 25, 26) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், திங்கள், செவ்வாய்க்கிழமை (செப். 28, 29) இரு நாள்களில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடதமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 24), சூறாவளிக் காற்று 65 கி.மீ.வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 60 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும்.

மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் குணமங்கலம் , மேலப்பாலையூரில் தலா 30 மி.மீ. மழைப் பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments