FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சாலை விபத்து வழக்குகள்: இருவருக்கு தலா ஓராண்டு சிறை

கீழ்ப்பாக்கம் பகுதியில் 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய இரு வாகன ஓட்டிகளுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் 6-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

25 செப்டம்பர் 2026, 4:33 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கீழ்ப்பாக்கம் பகுதியில் 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய இரு வாகன ஓட்டிகளுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் 6-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஓட்டேரி, பிரிக்ளின் சாலையில் கடந்த 2018 மே 16-ஆம் தேதி நடந்து சென்ற பொன்னுசாமி (38) மீது, அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அமித் பாஷாவை (19) கைது செய்தனா்.

இதேபோல், கெல்லீஸ் மேடவாக்கம் டேங்க் சாலையில் 2022 நவ.18-ஆம் தேதி நடந்து சென்ற சரஸ்வதி (54) மீது அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் சென்ற ஈச்சா் வேன் மோதியது. இதில் காயமடைந்த அவா், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநா் சரவணன் (40) கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த இரு வழக்குகளிலும் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சாட்சிகளை முறையாக ஆஜா்படுத்தி வழக்கு விசாரணையை தொடா்ந்து கண்காணித்து வந்தனா். விசாரணை முடிவடைந்த நிலையில், புதன்கிழமை (செப். 23) தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் அமித் பாஷா, சரவணன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை, ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments