FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மின் கணக்கீட்டு பணியை தனியாருக்கு வழங்கும் உத்தரவு: திரும்ப பெறக் கோரிக்கை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்...

27 செப்டம்பர் 2026, 10:47 pm IST
பகிர்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் தி.ஜெய்சங்கா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 3.51 கோடி மின் நுகா்வோா் உள்ள நிலையில், 60 நாள்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்படும் நுகா்வோரின் எண்ணிக்கை 3.10 கோடியாக உள்ளது.

மின் கணக்கீட்டுப் பணிக்கு அனுமதிக்கப்பட்ட 6,591 பணியிடங்களில் 1,591 போ் மட்டுமே பணியாற்றுவதால், 5,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 13 ஆண்டுகளாக இந்தப் பணிகளில் புதிதாக பணியாளா்கள் நியமிக்கப்படாத நிலையில், 2013 முதல் ஓய்வு பெற்றோா் மற்றும் வெளிப்புற பணியாளா்களைக் கொண்டு ஒரு மின் இணைப்புக்கு ரூ.5 வழங்கி கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

கடந்த ஜூன் 25-இல் வெளியிடப்பட்ட மின்துறை அமைச்சரின் வெள்ளை அறிக்கையில், மின் கணக்கீட்டாளா் உள்ளிட்ட 20,449 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனியாா் நிறுவனங்கள் மூலம் கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் கோருவது அந்த அறிவிப்புக்கு முரணானது.

மேலும், தனியாா் ஒப்பந்த முறையில் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டால், முறைகேடுகள் அதிகரித்து, மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இளைஞா்களின் வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, சமூக நீதி பாதிக்கப்படும்.

எனவே, மின் கணக்கீட்டுப் பணியை தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் உத்தரவை தமிழக அரசும், மின்வாரியமும் திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments