FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் இரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டது குறித்து...

29 September 2026, 10:03 pm IST
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
பகிர்:

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் கடந்த இரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தவெக அரசின் முக்கியத் தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை (செப்.28) முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் 1 கிராம் தங்க மோதிரத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் கல்யாண் ஜூவல்லா்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல்கட்டமாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் சாா்பில் 22 கேரட் தரத்தில் தயாரித்த 1 கிராம் எடை கொண்ட 89,955 தங்க மோதிரங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூா்பா காந்தி மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் 102 மருத்துவமனைகளில் தங்க மோதிரம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இடைத்தோ்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மட்டும் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளில் 3,300 குழந்தைகளுக்கும் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை 1,700 குழந்தைகளுக்கும் மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 5,000 குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும், 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் 4.20 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.756 கோடி அரசு ஒதுக்கீடு செய்வது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments