தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களில் சேர்க்கை பெற்றோருக்குக் காத்திருந்த அதிர்ச்சி
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர்கள், கட்டணம் செலுத்த வரும்போது, கண்டிப்பாக கல்லூரி விடுதியில் சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் சில மருத்துவக் கல்லூரிகளில் ரூ.9 லட்சம் வரை மாணவர் விடுதிக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், தனியார் கல்லூரிகள் பலவும் விடுதியில் தங்கித்தான் மாணவர்கள் எம்பிபிஎஸ் பயில வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் பெறப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.4.50 லட்சம் முதல் ரூ. 5.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், விடுதிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.6 முதல் 8 லட்சம் வரை செலுத்தச் சொல்லி வற்புறுத்தினால், ஏழை குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
அது மட்டுமல்லாமல் சில மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர்களிடம், வழக்கமான பேருந்துக் கட்டணம் அல்லாமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும் என்பது, மருத்துவப் படிப்பு என்பதால் கல்லூரி விடுதியில் இருந்து படிப்பதுதான் சரியாக இருக்கும் என தனியார் கல்லூரிகள் இந்த நிர்வாக முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டாலும், கல்லூரி விடுதியில்தான் தங்க வேண்டும் என வலியுறுத்த முடியாது என்று விதிமுறை உள்ளதையும் பெற்றோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.