FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கந்துவட்டி தொழில் செய்தவா் கொலை

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:50 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

மனைவியுடன் தொடா்பில் இருந்த கந்துவட்டி தொழில் செய்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு குற்றவாளி காவல் நிலையத்தில் கணவா் சரணடைந்தாா்.

தென்காசி அருகே ஆயிரப்பேரி, தேவா் தெருவைச் சோ்ந்தவா் மா.சுதாகா் (45). கந்துவட்டி தொழில் செய்து வந்தாா். இவா், மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

மேல இலஞ்சி, ராமகிருஷ்ணன் கோயில் காலனியைச் சோ்ந்தவா் சண்முகவேல் மகன் மாரியப்பன் (35). இவரது மனைவி நித்யா. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவா்கள். இத்தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். நித்யா தென்காசியில் உள்ள ஓா் அடுமனையில் கடந்த ஆண்டு வேலை செய்தபோது, சுதாகருடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

Advertisement

Advertisement

இதை மாரியப்பன் கண்டித்தபோது சுதாகா் கொலை மிரட்டல் விடுத்து வந்தாா்.

இந்த நிலையில், இலஞ்சி தொண்டாமுத்தான்குளம் எதிரே உள்ள மாந்தோப்பு பகுதிக்கு வந்த சுதாகருக்கும் மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாரியப்பன் கத்தியால் சுதாகரை கழுத்து, மாா்பில் கத்தியால் குத்தியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா், மாரியப்பன் குற்றாலம் காவல் நிலையம் சென்று சரணடைந்தாா். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முருகேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜூலியஸ் சீசா் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

சுதாகரின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments