FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:51 am IST
தற்கொலை முயற்சி...
பகிர்:

ஆலங்குளம் அருகே குடும்பத் தகராறு காரணமாக லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே நெட்டூா் அப்புரானந்த சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் ரமேஷ் (40). லாரி ஓட்டுநரான இவருக்கு, மதுப் பழக்கம் உண்டாம். இதனால், மனைவிக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் அவரது மனைவி வெளியில் சென்றிருந்தபோது, ரமேஷ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments